பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கலசபாக்கம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

Update: 2023-05-14 17:09 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த சொரக்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மூத்த மகள் சிவரஞ்சினி (வயது 26). இவருக்கும், கலசபாக்கம் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த சிவரஞ்சனி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்