பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வந்தவாசி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-05-07 15:51 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொவளை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அம்மு (வயது 32). இவர்களுக்கு அனுஷ்குமார் (12), கோகுல் (8) என 2 மகன்கள் உள்ளனர். செந்தில் சரிவர வேலைக்கு செல்வதில்லை என தெரிகிறது.

மேலும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அம்மு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்