பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-26 18:39 GMT

புதுக்கோட்டை நரிமேட்டில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அன்பழகனின் மனைவி பானுமதி (வயது 55). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பானுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பானுமதி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்