தூக்குப்போட்டு பெண் தற்கொலை

வாலாஜாவில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-03-27 18:09 GMT

வாலாஜா திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தெய்வகுமார், கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 33). நேற்று காலை கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. பின்னர் தெய்வகுமார் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ராஜேஸ்வரி தூக்குப்போட்டு கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது டாக்டர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்