தூக்குப்போட்டு பெண் தற்கொலை

வாலாஜா அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-07 17:21 GMT

வாலாஜா

வாலாஜாவை அடுத்த அனந்தலை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது மகள் சந்தியா (வயது 26). இவருக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது.

இவரது கணவர் ஸ்ரீதர் ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் வீடு திரும்பிய ஸ்ரீதருக்கும், சந்தியாவிற்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சந்தியா படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தியாவுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்