தூக்குப்போட்டு பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Update: 2023-01-21 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மோரை பாதையை சேர்ந்தவர் துரைவேலன்(வயது 35). இவருடைய மனைவி இந்துமதி(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பசுங்காயமங்கலம் சாலையில் புதிதாக கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இந்துமதி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்