பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தென்தாமரைக்குளம் அருகே வெளிநாட்டில் இருந்து கணவர் பணம் அனுப்பாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-13 18:45 GMT

தென்தாமரைகுளம்,

தென்தாமரைக்குளம் அருகே வெளிநாட்டில் இருந்து கணவர் பணம் அனுப்பாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் வெளிநாட்டில்

தென்தாமரைக்குளம் அருகே உள்ள கீழமணக்குடி, கீழத்தெருவை சேர்ந்தவர் சகாயதாமஸ் பெர்லின். இவரது மனைவி மேரி ஸ்டெல்லா (வயது39). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் 10-ம் வகுப்பும், மகன் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

சகாயதாமஸ் பெர்லின் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அத்துடன் ஊரில் புதிதாக வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வெளிநாட்டில் சரியாக வேலை இல்லாததால் வீட்டிற்கு பணம் அனுப்ப முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் மேரி ஸ்டெல்லா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர். அதன்பின்பு வீட்டில் தனியாக இருந்த மேரி ஸ்டெல்லா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த குழந்தைகள் தாயார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்