பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஓச்சேரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-12-29 17:11 GMT

ஓச்சேரி அருகே உள்ள கரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி அனிதா (வயது 39). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தங்கதுரை சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் அனிதா இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அனிதாவை விவசாய வேலைக்கு அழைத்து செல்ல அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அவருடைய வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது வீட்டில் அனிதா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவளூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்