தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Update: 2022-12-15 18:45 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 25). இவருக்கும் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் தன்னை பார்க்க வராததால் ஈஸ்வரி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அக்கா சங்கீதா வடக்கு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்