தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வளவனூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வளவனூர்,
வளவனூர் அருகே கொங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 43). இவரது மனைவி கோமதி (34). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாடி படியிலிருந்து கீழே விழுந்தார். இதில் முதுகுத்தண்டில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது கோமதி, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் முதுகுத்தண்டில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கோமதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.