தூக்கு போட்டு பெண் தற்கொலை

நாலாட்டின்புத்தூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்கு போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-14 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள கடலையூரை சேர்ந்தவர் செல்லப்பா (42). கூலி தொழிலாளியான, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியா (36) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரியா தீப்பெட்டி ஆலைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் கடந்த சில நாட்களாக பிரியா மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தீப்பெட்டி ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணியளவில் வீட்டிற்கு வந்த பிரியா, ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பது குறித்து கூறியுள்ளார். அதற்கு அவரது கணவர் இப்போது வேண்டாம் என்றும் அதற்கு தம்மிடம் போதிய பணம் இல்லை என்றும், பிறகு பார்ப்போம் என கூறினாராம்.

தூக்கு போட்டு தற்கொலை

இதனால் மன வேதனை அடைந்த பிரியா அன்று இரவில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து பிரியாவின் தாய் ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்