தூக்குப்போட்டு பெண் தற்கொலை

வேதாரண்யம் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2022-07-29 17:07 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

சூடான உப்புமாவில் கை வைத்த குழந்தை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவருடைய மனைவி பிரியா (வயது22). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பிரியா வீட்டில் உப்புமா சமைத்து அதை தரையில் வைத்துள்ளார். அப்போது அங்கிருந்த குழந்தை, சூடாக இருந்த உப்புமாவில் கை வைத்து விட்டது. இதை பார்த்த மாணிக்கவாசகம் மனைவி பிரியாவை தாக்கியதாக தெரிகிறது.

தூக்கில் பிணம்

பின்னர் அவர் தனது குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் பிரியா மட்டும் இருந்துள்ளார். பின்னர் மறுநாள் காலையில் மாணிக்கவாசகம் தனது வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்துள்ளது.

இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது பிரியா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரியாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் வேதாரண்யம் உதவி கலெக்டர் ஜெயராஜ பவுலின் மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்