தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திண்டிவனம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை கணவர் கைது

Update: 2022-07-03 16:36 GMT

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த காட்டு புஞ்சைகிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் மகன் கிருஷ்ணமூர்த்தி(வயது 37). இவருக்கும் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பருத்திக்கொல்லை கிராமத்தை சேர்ந்த தாமரைச்செல்வி(26) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது. கிருஷ்ணமூர்த்தி கடந்த 2019-ம் ஆண்டு வேலைக்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறி தாமரைச்செல்வியின் நகையில்இருந்து 8 பவுன் நகையை அடகு வைத்ததாகவும், வேறு ஒரு பெண்ணுடன் அவர் தொடர்பு வைத்துக்கொண்டு தாமரைச்செல்வியை சரிவர கவனிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த தாமரைச்செல்வி சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை விநாயகம் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது தாயார் மகாராணி ஆகியோர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்