தூக்குப்போட்டு பெண் தற்கொலை

மேல்மலையனூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-23 18:45 GMT

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே எதப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமன் என்கிற சேகர் (வயது 55), விவசாயி. இவரது மனைவி சுசீலா (40). சம்பவத்தன்று இவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுசீலா பாிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசீலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்