தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கீழக்கரையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கீழக்கரை,
கீழக்கரை பருத்திக்கார தெருவைச் சேர்ந்தவர் செய்யது ரிபாயா (வயது 37). இவருக்கும் சகுபர் சாதிக் அலி என்பவருக்கும் திருமணம் நடந்து 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2013-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதனால் செய்யது ரிபாயா தனிமையாக வாழ்ந்து வந்துள்ளார். அதிக கடன்வாங்கி 2 பிள்ளைகளையும் வளர்த்ததாக கூறப்படுகிறது. கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமல் போனதால் மன உளைச்சல் அடைந்த செய்யது ரிபாயா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த 2 மகன்களும் வீட்டுக்கு வந்த போது கதவு பூட்டி இருந்தது.நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்த போது தாயார் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனே கீழக்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.