தூக்குப்போட்டு பெண் தற்கொலை
விழுப்புரம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மனைவி சுமதி(வயது 50). இவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சுமதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.