தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டாா்

Update: 2023-06-02 22:02 GMT

ஈரோடு பழையபாளையம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி லோகநாயகி (வயது 42). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்ததால், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமடையாமல் சிரமப்பட்ட லோகநாயகி வாழ்க்கையில் வெறுப்படைந்தார். கடந்த 31-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது லோகநாயகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று, லோகநாயகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்