ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள நத்தம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 45). இவரது மகள் முனீஸ்வரியை(25) கலிங்கப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக முனீஸ்வரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கருப்பையா கொடுத்த புகாரில் நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.