பெண் தற்கொலை

திண்டுக்கல் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-02 17:03 GMT

திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். அவருடைய மனைவி கார்த்திகாராணி (வயது 46). இந்த தம்பதிக்கு ஆதித்யா (22), ஹரிஷ் (16) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துகிருஷ்ணனும், கார்த்திகாராணியும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். ஜம்புளியம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கார்த்திகா ராணி வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகாராணி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்