திருச்சுழி
திருச்சுழி அருகே ப.வாகைக்குளத்தை சேர்ந்த செல்வி மகள் முத்துலெட்சுமிக்கும்(வயது 23), அதை ஊரை சேர்ந்த முனீஸ்வரனுக்கும்(27) திருமணம் முடிந்து 2 ஆண் குழந்தைகள் உள்ளன . இந்தநிலையில் முத்துலெட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து தகவல் தெரிந்ததும், அங்கு விரைந்து சென்ற செல்வி தன் மகளை மீட்டு பரளச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார். ஆனால் பரிசோதனை செய்த டாக்டர்கள் முத்துலெட்சுமி இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின்பேரில், பரளச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.