காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

போச்சம்பள்ளி அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-21 18:03 GMT

மத்தூர்

போச்சம்பள்ளி பழனி ஆண்டவர் நகரை சேர்ந்தவர் திருப்பதி. மினி லாரி உரிமையாளர். இவரது மனைவி ஜோதிகா (வயது21). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த ஜோதிகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்