பெண் தற்கொலை

ரெட்டியார்சத்திரம் அருகே, குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-02 15:14 GMT

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொல்லம்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வரதராஜன். அவருடைய மனைவி பஞ்சம்மாள் (வயது 55). இவர், குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பஞ்சம்மாளின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்