லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலையில் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-05-14 17:04 GMT

திருவண்ணாமலை தாலுகா மங்கலம் கீழ்பாலானந்தல் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 44) என்பவரிடம் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை குறித்து விசாரணை முடித்து வைக்க லஞ்சமாக ரூ.3 ஆயிரம் வேண்டும் என்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவர் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்