குண்டர் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

நாகையில் குண்டர் சட்டத்தில் பெண் சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-07 16:37 GMT

வெளிப்பாளையம்:

நாகை தோணித்துறை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணியம்மாள் (வயது50). சாராய வியாபாரி. இவர் மீது நாகை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மணியம்மாளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் நாகை டவுன் போலீசார், மணியம்மாளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்