பெண் சாராய வியாபாரி கைது

வேப்பங்குப்பம் அருகே பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-22 18:03 GMT


வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் அருகே பின்னதுரை கிராமத்தில் சாராயம் விற்கப்படுவதாக வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பின்னதுரை கிராமத்தில் பத்மா (வயது 58) என்பவர் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பத்மாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயம், 130 கிலோ வெல்லம் மற்றும் மூலப்பொட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்