இயக்குநர் பா.ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார்

இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கறிஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-08-21 13:52 GMT

கோப்புப்படம்

சென்னை,

பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவான தங்கலான் திரைப்படம் கடந்த 15ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் இப்படம் இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற 30ம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பா.ரஞ்சித் மீது பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், "புத்த மதத்தை உயர்த்துவதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் தங்கலான் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சர்ச்சையான இந்த காட்சியை நீக்க வேண்டும். இது தொடர்பாக பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்குச் சென்று, படத்திற்கு தடைவிதிக்க கோரி வழக்கு தொடுப்பேன் என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகள் பலரது மனதை புண்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்