பெண் தீக்குளிப்பு

திருத்துறைப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளித்தார்.

Update: 2023-09-09 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை மாரியம்மன் கோவில் தெருைவ சேர்ந்தவர் சக்திவேல்(வயது45). விவசாயி. இவரது மனைவி சாவித்திரி(42). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த கிராமம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான அங்கன்வாடி மைய கட்டிடம் செயல்பட்டு வந்தது.

இந்த கட்டிடம் கஜா புயலின் போது சேதம் அடைந்தது. தற்போது இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நேற்று இ்ங்கு ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக திருத்துறைப்பூண்டி தாசில்தார் காரல்மார்க்ஸ், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அன்பழகன், வாசுதேவன், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் ஆகியோர் வந்தனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாவித்திரி திடீரென மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்