தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை

ஜெயங்கொண்டம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-12 20:06 GMT

பட்டதாரி பெண்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பிரகாஷ் (வயது 27). இவர் டிரைவராகவும், எலக்ட்ரீசியனாகவும் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தெற்கு தெரு ஆயுதகளம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் என்பவரது மகளும், பி.ஏ. பட்டதாரியுமான ஷாலினி (23) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சர்வேஸ்வரன் (2) என்ற குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதில் மனவேதனை அடைந்த ஷாலினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான 4 ஆண்டுகளில் பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்