பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் அருகே உள்ள புலியூர் வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவரது மகள் மது சத்தியப்பிரியா (22). பி.டெக் பட்டதாரியான இவர் மேற்படிப்பு படிக்க விரும்பியுள்ளார். இந்தநிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மது சத்யப்பிரியா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் சப்- இன்ஸ்பெக்டர் ஆர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.