கார் விற்பனை ஷோரூமில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை

கார் விற்பனை ஷோரூமில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பொதுமேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-28 19:53 GMT

தஞ்சை அய்யனார்புரத்தை சேர்ந்த 29 வயது பெண் திருச்சியில் கார் விற்பனை செய்யும் ஒரு ஷோரூமில் கடந்த 4 மாதமாக வேலை செய்து வருகிறார். இந்த நிறுவனத்தில் பிரேம்ஆனந்த் (45) என்பவர் உதவி பொதுமேலாளராக வேலை செய்து வருகிறார். இவர், அந்த பெண்ணை கண்ட இடங்களில் தொட்டும், ஆடைகளை பிடித்து இழுத்தும் பாலியல் தொந்தரவு கொடுத்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் காந்திமார்க்கெட் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், பிரேம் ஆனந்த் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்