விபத்தில் சத்துணவு பெண் பணியாளர் படுகாயம்

திண்டிவனம் அருகே விபத்தில் சத்துணவு பெண் பணியாளர் படுகாயம்;

Update: 2022-06-18 17:07 GMT

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள வேம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனீஸ்வரன் மனைவி மகாலட்சுமி(வயது 31). சத்துணவு பணியாளரான இவர் சம்பவத்தன்று ஸ்கூட்டரில் இறையானூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவரும் தனது குழந்தையை அழைத்து வருவதற்காக சென்று கொண்டிருந்தார். கர்ணாவூர் பேட்டை ரோட்டில் வந்தபோது பின்னால் வந்த பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிள் மகாலட்சுமி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்