பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை

வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-12 17:37 GMT

செய்யாறு

வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை

செய்யாறை அடுத்த வெம்பாக்கம் தாலுகா திருப்பனமூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 30), கூலி தொழிலாளி.

இவரது உறவினரான 80 வயது முதியவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெருமாள் முதியவரை வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் பெண் டாக்டர் ஒருவர் பணியில் இருந்தார். அவர் பெருமாள் அழைத்து சென்ற முதியவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.

அப்போது பெருமாள் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் அலறி கூச்சலிட்டார். உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமாளை மடக்கி பிடித்தனர்.

வாலிபர் கைது

இதுகுறித்து மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபு பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பெருமாளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பெருமாள் பெண் டாக்டரிடம் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தார்.

பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்