கார் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் டாக்டர் பலி

காரிமங்கலம் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் டாக்டர் பலியானார். டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-03-28 18:45 GMT

காரிமங்கலம்

காரிமங்கலம் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் டாக்டர் பலியானார். டிரைவர் படுகாயம் அடைந்தார்.

கார் கவிழ்ந்தது

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன் பகுதியை சேர்ந்தவர் சுந்தர விநாயகம். இவருடைய மகள் மீனா (வயது 29). இவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பெங்களூருக்கு காரில் புறப்பட்டார்.

இந்த காரை பெங்களூரு கோழிக்கோடு லேஅவுட் பகுதியை சேர்ந்த டிரைவர் வினோத் (27) என்பவர் ஓட்டி சென்றார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பெரியாம்பட்டி ஆற்று பாலம் அருகே நேற்று அதிகாலை சென்றபோது கார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையோரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

டாக்டர் சாவு

இந்த விபத்தில் டாக்டர் மீனா காரில் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் வினோத் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தை பற்றி அந்த வழியாக சென்றவர்கள் காரிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று டிரைவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து போலீசார் விபத்தில் இறந்த டாக்டர் மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ககாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் கவிழ்ந்த விபத்தில் பெண் டாக்டர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்