அ.தி.மு.க. ஒன்றிய பெண் கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை
சாணார்பட்டி அருகே அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள பாலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி தீபா (வயது 33). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக தீபா இருந்து வந்தார். வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.