திருக்கோவிலூர் அருகேகிணற்றில் பெண் பிணம்கொலையா? போலீஸ் விசாரணை

திருக்கோவிலூர் அருகே பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2023-03-23 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள பாடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி ராணி (வயது 55). இவர் நேற்று காலை அதே ஊரில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தாா். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த விவசாய தொழிலாளர்கள், இதுபற்றி திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, ராணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்