கிணற்றில் பெண் பிணம்
நாங்குநேரி அருகே கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதந்தார்.;
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தைச் சேர்ந்த முத்து மனைவி முத்தம்மாள் (வயது 50). இவர் களக்காடு ரோட்டில் உள்ள பழைய கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முத்தமாள் மற்றும் கணவர் 10 இடையே ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து விட்டனர். குழந்தையும் இல்லை. தந்தை ஆறுமுகம் ஏற்கனவே தனது மகளை நேற்று முன்தினம் முதல் காணவில்லை என்று நாங்குநேரி போலீசில் அளித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.