வீட்டில் கருகிய நிலையில் பெண் பிணம்

பள்ளிபாளையம் அருகே வீட்டில் கருகிய நிலையில் பெண் பிணம்; தற்கொலையா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;

Update:2023-03-15 00:15 IST

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அருகே புதுப்பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). இவர் மனைவி கமலா தேவி (23). திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வகுமார் விசைத்தறி ஓட்டி வருகிறார். நேற்று மதியம் கமலா தேவி தீயில் கருகிய நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். அதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கமலாதேவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி நேரில் சென்று விசாரணை நடத்தினார். திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். கமலா தேவி இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் பல கோணத்தில் அவரது கணவர் செல்வகுமார் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்