ரெயிலில் இருந்து தவறி விழுந்த மருந்து விற்பனை பிரதிநிதி சாவு

ரெயிலில் இருந்து தவறி விழுந்து மருந்து விற்பனை பிரதிநிதி இறந்தாா்..

Update: 2023-10-17 23:00 GMT

கேரள மாநிலம் திருச்சூர் மஞ்சாடி ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவருடைய மகன் ஸ்ரீஜித் (வயது 30). மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் அலுவலக வேலை காரணமாக கடந்த 14-ந் தேதி பெங்களூருக்கு சென்றிருந்தார். பின்னர் தனது நண்பர்களுடன் கேரள மாநிலத்துக்கு காரிப்ராத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திரும்பினார். அந்த ரெயில் ஆனங்கூர் ரெயில் நிலைய யார்டு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் நின்று பயணம் செய்து கொண்டிருந்த ஸ்ரீஜித் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஸ்ரீஜித்துக்கு கிருஷ்ணா என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்