போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-08-25 17:30 GMT

திருப்பத்துார் மாவட்டம், கந்தலி அருகே உள்ள குனிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் நீதிநேசன் (வயது 21), டிராக்டர் டிரைவர். இவர் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து அங்கிருந்து கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சென்னையில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிநேசன் கடத்தி வந்த சிறுமையை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணைக்காக நீதிநேசனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்ததாக தெரிகிறது.

போலீஸ் விசாரணைக்கு பயந்த நீதிநேசன் தனது வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கந்திலி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நீதிநேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்