குழந்தை திருமணம் செய்த வழக்கில் தந்தை-மகன் போக்சோவில் கைது

குழந்தை திருமணம் செய்த வழக்கில் தந்தை-மகன் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-30 19:52 GMT

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கல்பூண்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 33). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இது தொடர்பாக புகாரின் பேரில் கடந்த 28-ந்தேதி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ்குமாரையும், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அவருடைய தந்தை நாரயணசாமியையும் (60) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சுரேஷ்குமாரின் தாய், தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தற்போது அந்த சிறுமிக்கு ஒரு குழந்தை உள்ளதாகவும், மேலும் அச்சிறுமி 2-வது முறை கர்ப்பமடைந்து, கருகலைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சையில் குழந்தை இறந்து பிறந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்