விருத்தாசலம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய தந்தை-மகன் கைது

விருத்தாசலம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய தந்தை-மகன் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-03-02 18:45 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார். கரும்பு வெட்டும் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன்(வயது 40) என்பவருக்கும், கரும்பு வெட்டுவதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று, அஜித்குமார், அப்பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேல்முருகனுக்கும், அஜித்குமாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், தனது மகன் சஞ்சய் குமாருடன் (20) சேர்ந்து, அஜித்குமாரை ஆபாசமாக திட்டி தாக்கி கத்தியால் குத்தினார். இதை தடுக்க வந்த அஜித்குமாரின் தம்பி வல்லரசுவையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அஜித்குமார், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், சஞ்சய் காந்தி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்