அன்னதானப்பட்டி:-
சேலம் அன்னதானப்பட்டி ஆத்துக்காரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் லலித் குமார் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டின் அருகே சில்லி சிக்கன் கடை ஒன்று உள்ளது. சம்பவத்தன்று அந்த கடையின் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த வழியாக காரில் வந்த லலித் குமார், இது குறித்து கடைக்காரர்களிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. இதில் லலித் குமார் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் லலித் குமாரை தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த சில்லி சிக்கன் கடை நடத்தி வரும் வெங்கடேசன் (65), அவருடைய மகன் விஷ்ணுகுமார் (38) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.