ஆசிரியரை தாக்கிய தந்தை, மகன் கைது
களக்காடு அருகே ஆசிரியரை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஆசீர்வாதம் மனைவி கீதா (வயது 46). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவரது மகன் ஆகீஸ் பிளஸ்சிங்க்கும் (18), அதே ஊரைச் சேர்ந்த ஜெகதீஸ் (52) மகன் சைமன்ராஜும் நண்பர்கள். இருவரும் ஒன்றாக சர்ச்க்கு சென்று வந்துள்ளனர். ஆகீஸ் பிளஸ்சிங்கும் சைமன்ராஜிம் பழகுவது, சைமன்ராஜின் தந்தை ஜெகதீசுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெகதீஸ், அவரது தந்தை சிவசாமி (82), தாயார் பத்திரகாளி (80) ஆகியோர் கீதா வீட்டிற்கு வந்து, உனது மகன் எனது மகனுடன் பழகுவதால், அவன் கெட்டு போய் விடுகிறான் என்று கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெகதீஸ், அவரது தந்தை சிவசாமி, தாயார் பத்திரகாளி ஆகியோர் சேர்ந்து கீதாவையும், அவரது மகன் ஆகீஸ் பிளஸ்சிங்கையும் கம்பால் தாக்கினர். மேலும் கத்தியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த கீதா, ஆகீஸ் பிளஸ்சிங் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெகதீஸ், சிவசாமி ஆகியோரை கைது செய்தனர். பத்திரகாளியை தேடி வருகின்றனர்.