இதழியல் பணியை கடந்து தமிழர் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் - அன்புமணி ராமதாஸ்
இதழியல் பணியை கடந்து தமிழர் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனாரின் 118-ஆவது பிறந்தநாள் இன்று. தமிழ் இதழியல் துறையில் அவர் அமைத்த பாதையும், அவர் படைத்த சாதனைகளும் வரலாறுகள். இதழியல் பணியை கடந்து தமிழர் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். அவரது பணிகளை, சாதனைகளை இந்த நாளில் போற்றி, அவரை வணங்குவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.