திருப்பரங்குன்றம் அருகே கர்ப்பிணி கொலையில் மாமனார்-மாமியார் கைது
திருப்பரங்குன்றம் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதல் கணவனுடன், மாமனார் மாமியார் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதல் கணவனுடன், மாமனார் மாமியார் கைது செய்யப்பட்டனர்.
காதல் திருமணம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 31) டிரைவர். தேனி மாவட்டம் கடமலை குண்டுவை சேர்ந்தவர் ரம்யா (25) நர்சு. திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் சதீஷ்குமாரும், ரம்யாவும் வேலை பார்த்து வந்தனர்.
வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் சதீஷ்குமார், ரம்யா ஆகிய இருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் விளாச்சேரி முனியாண்டிபுரம் குறிஞ்சி நகர் 2-வதுதெருவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். ரம்யா 3 மாத கர்ப்பமானார்
கட்டையால் அடித்து கொலை
இந்த நிலையில் சதீஷ்குமாருக்கும், ரம்யாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதில் ரம்யா கோபித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி சென்றுள்ளார். இந்த நிலையில் ரம்யாவை அவரது நெருங்கிய வட்டாரங்கள் சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்ற முன்தினம் சதீஷ்குமார், ரம்யாவிடம் தகராறு செய்து கட்டிட வேலைக்கு பயன்படுத்தகூடிய கட்டையால் அடித்து தாக்கி உள்ளார். அதில் படுகாயத்துடன், துடி, துடிக்க, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக ரம்யா இறந்தார்.
3 பேர் கைது
இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். .அதில் சதீஷ்குமார் மற்றும் அவரது பெற்றோர் தங்களது வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக பிரிந்து செல்லுமாறு ரம்யாவை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் ரம்யா கடந்த சில மாதங்களுக்கு அந்து உருண்டை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனையொட்டி திருமங்கலம் ஆஸ்பத்திரிக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.அது தொடர்பாக திருமங்கலம் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.
இந்த நிலையில் சதீஷ்குமாரின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யாவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்த நிலையில்தான் கட்டையால் தாக்கப்பட்டு ரம்யா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு வரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரம்யாவின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்தனர். இது தொடர்பாக சதீஷ்குமார் (31) சதீஷ்குமாரின் தந்தை செல்வம் (55), தாயார் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.