விஷம் குடித்து தந்தை தற்கொலை

மகன் இறந்த வேதனையில் விஷம் குடித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-21 19:12 GMT

சாத்தூர், 

சாத்தூர் அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிதாய் (வயது 42). இவரது கணவர் கருப்பசாமி (51). இவர்களது மகன் கடந்த மாதம் காய்ச்சலால் இறந்துவிட்டார். இதில் மனமுடைந்த கருப்பசாமி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்ற கருப்பசாமி சங்கரநத்தம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகில் விஷமருந்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து லட்சுமிதாய் மற்றும் அவரது உறவினர்கள் கருப்பசாமியை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கருப்பசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்