போக்சோவில் தந்தை கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் தனது 12 வயது மகளை ஒரு அறையில் அடைத்து வைத்து அரிவாளை காண்பித்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.