மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினராக பணியாற்றி வருபவர் பவுலின் சோபியா ராணி. இவர் திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் போலீசில் அளித்த புகாரில், "திருச்சியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியை அவரது தந்தையே கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தார். அதன்பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தந்தையை கைது செய்தனர்.