சாலை விபத்தில் படுகாயமடைந்தவா் சாவு

சாலை விபத்தில் படுகாயமடைந்தவா் இறந்தார்.

Update: 2023-07-22 18:48 GMT

 குளித்தலை அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 52). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் தண்ணீர்பள்ளியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். பின்னர் மீண்டும் புதுப்பாளையம் செல்வதற்காக தண்ணீர்பள்ளி -பரளி சாலையில் ேமாட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையின் குறுக்கே ஓடி வந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ராஜ்குமாரின் மனைவி தேவசேனா கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்