கவுந்தப்பாடி அருகே கார்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

கவுந்தப்பாடி அருகே கார்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

Update: 2022-06-02 21:15 GMT

கவுந்தப்பாடி

கோபி அருகே உள்ள வாணிப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 33). இவர் பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் நவீன் குமார் வேலைக்கு செல்வதற்காக கவுந்தப்பாடியில் இருந்து பல்லகவுண்டன்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். கண்ணாடிப்புத்தூர் ஆசாரி பட்டறை வளைவில் திரும்பும் போது அந்த வழியாக வந்த காரும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நவீன் குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்